< Back
மாநில செய்திகள்
வாடகையை குறைக்க மறுசீரமைப்பு குழு அமைக்க வேண்டும்
சிவகங்கை
மாநில செய்திகள்

வாடகையை குறைக்க மறுசீரமைப்பு குழு அமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
28 Nov 2022 11:10 PM IST

வாடகையை குறைக்க மறுசீரமைப்பு குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

காரைக்குடி,

காரைக்குடி வணிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம். ராஜாஜி பஸ் நிலையம் அருகில் உள்ள சங்க அலுவலகத்தில், நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.ஜி.ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பொருளாளர் பொசலான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காரைக்குடி ராஜாஜி பஸ் நிலையத்தை நவீன மயமாக்க வேண்டும். ராஜாஜி பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கடைகள் வாடகை உயர்த்தப்பட்டதால் வணிகர்கள் தொழிலை தொடர முடியாத நிலையில் உள்ளனர். இந்தநிலை குறித்த கோரிக்கையின் பேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாடகையை குறைக்க மறுசீரமைப்பு ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார். அதன்படி காரைக்குடி நகராட்சி வாடகை மறுசீரமைப்பு குழுவை அமைத்து வாடகையை குறைக்க வேண்டும். காரைக்குடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் மேற்கு நோக்கி செல்லக்கூடிய மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் போன்ற பஸ்களை ராஜாஜி பஸ் நிலையத்தி்ல் இருந்து இயக்க வேண்டும்.சிறுகுறு நிறுவனங்களுக்கு அரசு அறிவித்துள்ள வங்கி கடன்களை வங்கிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்