< Back
மாநில செய்திகள்
மறைமலைநகர் நகராட்சியில் ரூ.2 கோடியில் குளங்கள் சீரமைக்கும் பணிகள்; கலெக்டர் நேரில் ஆய்வு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மறைமலைநகர் நகராட்சியில் ரூ.2 கோடியில் குளங்கள் சீரமைக்கும் பணிகள்; கலெக்டர் நேரில் ஆய்வு

தினத்தந்தி
|
16 Feb 2023 4:45 PM IST

மறைமலைநகர் நகராட்சியில் ரூ.2 கோடியில் குளங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் சப்டான் குளம், ரூ.36.25 லட்சம் மதிப்பீட்டில் எட்டியம்மன் கோவில் குளம், ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் காட்டூர் குளம், ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் கங்கையம்மன் கோவில் என ரூ.1 கோடியே 92 லட்சத்தில் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று குளங்களை சீரமைக்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாக முடிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது கலெக்டருடன் மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் லட்சுமி, மறைமலைநகர் நகராட்சி மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா, மறைமலைநகர் நகராட்சி பொறியாளர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்