< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
வணிக வளாகத்தை சீரமைக்கும் பணி
|19 May 2023 12:15 AM IST
விருத்தாசலத்தில் வணிக வளாகத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை கூடுதல் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலம்.
விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் அரசுக்கு சொந்தமான பூமாலை வணிக வளாகம் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் வணிக வளாகம் பயன்பாடின்றி கிடந்தது. இதை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி பூமாலை வணிக வளாகத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணியை கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மதுபாலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீரமைப்பு பணியை நல்ல தரத்துடன் மேற்கொள்ள வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதிகா, தண்டபாணி, பொறியாளர் சண்முகம், கார்த்திக், ஒப்பந்ததாரர் பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.