< Back
மாநில செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
கரூர்
மாநில செய்திகள்

விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
29 July 2023 11:39 PM IST

விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக ஹெபடைடிஸ் (கல்லீரல்) நாள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் கல்லீரல் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) விஜயன், ஆசிரியர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் மலர்கொடி செய்திருந்தார்.

மேலும் செய்திகள்