< Back
மாநில செய்திகள்
வெடிமருந்துடன் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் அகற்றம்
சென்னை
மாநில செய்திகள்

வெடிமருந்துடன் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் அகற்றம்

தினத்தந்தி
|
16 Aug 2023 12:36 PM IST

திருவொற்றியூர்,

மணலி புதுநகர், பொன்னேரி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இங்கு வெடி மருந்து பொருட்கள் இருப்பதாக மணலி புதுநகர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நாக்பூரில் இருந்து வெடிபொருட்கள், மற்றும் வெடி மருந்து மூலப்பொருட்கள் 38 கன்டெய்னர் லாரிகளில் எந்தவித பாதுகாப்பு இல்லாமல் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து குடோன் உரிமையாளரிடம் விசாரித்தபோது சென்னை துறைமுகம் வழியாக துருக்கி நாட்டிற்கு கொண்டு செல்ல இருப்பதும், சரக்கு பெட்டகத்தில் வைக்க வேண்டிய வெடி மருந்து பொருட்களை தற்காலிகமாக குடோனில் வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். பாதுகாப்பில்லாமல் வெடிமருந்து பொருட்களை கன்டெய்னர் லாரிகளில் வைக்க கூடாது என போலீசார் எச்சரித்து அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறித்தினர். இதையடுத்து அனைத்து லாரிகளும் திருவொற்றியூரில் உள்ள கன்டெய்னர் சரக்கு பெட்டகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்