< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சோழிங்கநல்லூரில் சுங்கச்சாவடி கூடாரங்கள் அகற்றம்
|6 Jun 2022 11:06 AM IST
சோழிங்கநல்லூர் செம்மொழி சாலை மற்றும் கலைஞர் கருணாநிதி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கூடாரங்களை அகற்றப்பட்டது.
சோழிங்கநல்லூர்:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை, செம்மொழி சாலை போன்ற பகுதியில் செயல்பட்டு வந்த 4 சுங்கச்சாவடிகளில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பணம் வசூலிப்பதை நிறுத்தினர்.
அதை தொடர்ந்து கடந்த பல மாதங்களாக சுங்கச்சாவடியில் பணம் வசூல் செய்யும் அறை மற்றும் கூடாரம் அப்படியே இருந்தது. இந்த நிலையில் தற்போது வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருப்பதாக வந்த புகாரையடுத்து சுங்கச்சாவடியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்கட்டமாக சோழிங்கநல்லூர் செம்மொழி சாலை மற்றும் கலைஞர் கருணாநிதி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கூடாரங்களை அகற்றி வருகின்றனர்.