< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
|13 Oct 2023 12:15 AM IST
சங்கராபுரத்தில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
சங்கராபுரம்:
சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு காட்டுவன்னஞ்சூர், சிப்காட் அருகில் ஓடையை 7 பேர் ஆக்கிரமித்து சோளம், நெல் சாகுபடி செய்திருந்தனர். இது பற்றி அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், வட்ட சார் ஆய்வாளர் பிரபாகர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் நேரில் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றினர். அப்போது சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு, ஏட்டு புருஷோத்தமன்சிங் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.