< Back
மாநில செய்திகள்
குளம்போல் தேங்கிய மழைநீர் அகற்றம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

குளம்போல் தேங்கிய மழைநீர் அகற்றம்

தினத்தந்தி
|
30 Sept 2023 11:31 PM IST

தினத்தந்தி செய்தி எதிரொலியாக குளம்போல் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் தேவைகள் மற்றும் குறைகள் சம்பந்தமாக திமிரியில் உள்ள வட்டார சேவை மையத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழைகாரணமாக வட்டார சேவை மையம் முன்பு குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மழை நீரை கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து நேற்று முன்தினம் தினத்தந்தியில் செய்தி பிரசுரமானது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பொக்லைன் எந்திரம் மூலம் தற்காலிகமாக கால்வாய் அமைத்து மழைநீரை வெளியேற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்