< Back
மாநில செய்திகள்
ஆவடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சென்னை
மாநில செய்திகள்

ஆவடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
17 July 2023 1:39 PM IST

ஆவடியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

ஆவடி புதிய ராணுவ சாலையில் சாலையின் இரு புறங்களிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டன. முன்னதாக சாலையோர கடைகளின் முன் பகுதியில் இருந்த மேற்கூரை, பெயர் பலகைகள், படிக்கட்டு உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றி முறையாக மழைநீர் கால்வாய் அமைத்தனர்.

தற்போது மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், சிறு, பெரு கடைகள் என 100-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பகுதியில் மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து பழையபடி பெயர் பலகைகள், படிக்கட்டிகள் மற்றும் கடையின் முன்பு மேற்கூரைகள் அமைத்தனர்.

இதையடுத்து ஆவடி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், ஆவடி போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் ராமச்சந்திரன் உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் பாதுகாப்புடன் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் கால்வாய் மீது இருந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.

மேலும் செய்திகள்