< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|4 July 2023 1:15 AM IST
திண்டுக்கல்லில் மாநகராட்சி சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
திண்டுக்கல் ஜி.டி.என்.சாலையில், ரெயில்வே கேட் அருகில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடங்களில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
அதன்பேரில் நகரமைப்பு இளநிலை பொறியாளர் தன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் ஜி.டி.என். சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று அகற்றினர். இதேபோல் அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகள், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்பட்டன. மேலும் அந்த பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.