திண்டுக்கல்
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|பழனியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
பழனி பஸ் நிலையம், அடிவாரம் ரோடு ஆகிய இடங்களில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ்நிலையம், அடிவாரம் ரோடு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அதன்படி திண்டுக்கல் சாலை, புதுதாராபுரம் சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயபாலன் தலைமையில், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இனிவருங்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையை ஆக்கிரமிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.