கள்ளக்குறிச்சி
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
|ரிஷிவந்தியத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் பஸ் நிறுத்தத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சாலையோர பகுதியை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்ததால், கழிவுநீர் கால்வாய் அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்புகளை பெரும்பாலானவர்கள் அகற்றிக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சிவசுப்ரமணியம் தலைமையில் உதவி பொறியாளர் ஷர்மா மற்றும் சாலை பணியாளர்கள் நேற்று ரிஷிவந்தியத்தில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.