< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை காசிமேட்டில் பைப் லைனில் ஏற்பட்ட கசிவால் குளம் போல் தேங்கிய எண்ணெய் அகற்றம்
|28 Sept 2022 3:50 PM IST
சென்னை காசிமேடு துறைமுகத்தில் குளம் போல் தேங்கிய எண்ணெய் கசிவு முழுவதுமாக அகற்றப்பட்டது.
சென்னை,
சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூர் எண்ணெய் நிறுவனம் வரை பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழியாக செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குழாய்களில் விரிசல் ஏற்பட்டதால், எண்ணெய் முழுவதும் வெளியேறி கப்பல் கட்டும் தளத்தில் குளம் போல் தேங்கியது.
இதை பணிக்கு வந்த மீனவர்கள் கண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 2.5 டன் அளவு குளம் போல் தேங்கி நின்ற எண்ணெய்யை உடனடியாக அகற்றும் பணியில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர். வாளிகள், குழாய்கள் ஆகியவற்றைக் கொண்டு எண்ணெய் கசிவை அதிகாரிகள் முழுவதுமாக அகற்றினர்.