நாகப்பட்டினம்
வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்
|வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்
வேதாரண்யத்தை அடுத்த நாகை சாலையில் வேதாமிர்த ஏரி எனும் தீர்த்த குளம் உள்ளது. கடந்த ஆட்சியில் இந்த ஏரியை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரியின் நடுவில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் தனது சொந்த செலவில் தடாக நந்திகேஸ்வரர் கோவிலை கட்டினார். இந்த கோவிலில் நாளை(திங்கட்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. விழாவையொட்டி நேற்று விக்னேஸ்வர பூஜை தொடங்கியது. விழாவிற்கு வரும் பக்தா்களை வரவேற்றும், குடமுழுக்கு விழாவிற்கு வரும் தருமபுரம் ஆதீனத்தை வரவேற்று சாலையோரத்தில் பிளக்ஸ் போர்டுகளை கோவில் விழாக்குழுவினர் வைத்திருந்தனர். இங்கு பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. இதனை உடனே அகற்ற வேண்டும் என போலீசார், விழாக்குழுவினரை கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை ஏற்று உடனடியாக விழாக்குழுவினர் பிளக்ஸ் போர்டுகளை அகற்றினர்.