< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் அகற்றம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் அகற்றம்

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

ரிஷிவந்தியத்தில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் அகற்றப்பட்டது.

ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் இருந்து திருக்கோவிலுார்-தியாகதுருகம் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் பஸ் நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், டீ கடைகள், தீவனம், பால் மற்றும் ஜெராக்ஸ் கடை, பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சவுரிராஜ், வாணாபுரம் தாசில்தார் குமரன், துணை தாசில்தார் சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணையன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, ஊராட்சி தலைவர் வினிதாமகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் தோப்புக்காரன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்