< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்

தினத்தந்தி
|
25 April 2023 4:33 PM IST

ஆரணி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டது. அப்போது 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி

ஆரணி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டது. அப்போது 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரியன் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் சங்கர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

கார்த்தி என்பவரின் சிெமண்டு ஷீட் வீடு, லட்சுமணன் என்பவரின் மாடி வீடு, சாமந்தி என்பவரின் ஓட்டு வீடு ஆகிய 3 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது.

இவர்கள் 3 பேருக்கும் மாற்று இடமாக இரும்பேடு கிராமத்தில் கிராம நத்தம் புறம்போக்கு இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி இன்று பொதுப்பணித்துறையுடன் இணைந்து, காவல்துறை உதவியுடன் தாசில்தார் ரா.மஞ்சுளா தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது பொதுப்பணித்துறையினர், காவல் துறையினர், மின்வாரியத் துறை அலுவலர்கள், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், எஸ்.வி.நகரம், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

அப்போது 2 பெண்கள் தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு வீட்டை இடித்து அகற்றக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தீ்க்குளிக்க முயன்றனர்.

உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்