திண்டுக்கல்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|செந்துறையில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நத்தம் அருகே உள்ள செந்துறை பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் நில அளவையர் ருத்தரகுமார் மற்றும் ஊழியர்கள் அளவீடு செய்தனர். பின்னர் அந்த பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 60-க்கும் மேற்பட்ட கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இந்த பணியின்போது, பாதுகாப்பு பணியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பூபதி உள்ளிட்ட போலீசார்கள் ஈடுபட்டனர்.