< Back
மாநில செய்திகள்
ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்
கடலூர்
மாநில செய்திகள்

ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

தினத்தந்தி
|
20 Dec 2022 7:41 PM GMT

ராமநத்தம் அருகே ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே பாளையம் கிராமத்தில் 23 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை 28 குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனர். இந்த வீடுகளை காலி செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் நோட்டீசு கொடுத்தனர். இந்தநிலையில் நேற்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுதர்சன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், கிராம நிர்வாக அலுவலர் காதர் பாத்திமா ஆகியோர் ஏரிக்கு சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளில் குடியிருப்பவர்கள், மேலும் ஒரு வாரம் மட்டும் அவகாசம் கேட்டனர். இதையடுத்து அவர்களுக்கு அதிகாரிகள் அவகாசம் கொடுத்தனர். பின்னர் வீடுகளை தவிர மற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்