< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்
|28 Sept 2022 12:15 AM IST
திருக்கோவிலூரில் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் பெரிய ஏரியை ஆக்கிரமித்து கீற்று கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தது. இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணி துறையினர் ஏரிக்கு சென்று அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கீற்று கொட்டகைகளை பார்வையிட்டனர். இதையடுத்து தாசில்தார் உத்தரவின்பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் கீற்று கொட்டகைகள் அகற்றப்பட்டன. அப்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க திருக்கோவிலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.