< Back
மாநில செய்திகள்
நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தேனி
மாநில செய்திகள்

நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
5 Oct 2023 1:15 AM IST

ஆண்டிப்பட்டி அருகே நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள மொட்டனூத்து ஊராட்சி கொப்பையம்பட்டியில் நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நேற்று பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முருகேஸ்வரன் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர். ராஜதானி இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்