< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்

தினத்தந்தி
|
6 Nov 2022 11:40 PM IST

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியை தொடர்ந்து விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

விழுப்புரத்தில் பழைய பஸ் நிலையம் உள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களில் சேரும் குப்பைகளை மூட்டைகளாக கட்டி பஸ் நிலையத்திற்குள் கொண்டுவந்து கொட்டி வந்தனர். இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிந்து கிடந்தன.

மேலும் குப்பைகள், அங்குள்ள கழிவுநீர் வாய்க்கால் அருகிலேயே போட்டுவிட்டு சென்றதால் கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.

இதனால் அ்ங்கு துர்நாற்றம் வீசியதால் பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு பஸ் நிலையத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்த செய்தி படத்துடன் நேற்று 'தினத்தந்தி' நாளிதழில் வெளிவந்தது.

சுகாதார பணி

இதையடுத்து விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் மோகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் பஸ் நிலையத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை அள்ளி லாரி மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு சுகாதார பணியில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். மேலும் அவர்கள் 'தினத்தந்தி'க்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்