கள்ளக்குறிச்சி
தேசிய நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்
|தினத்தந்தி செய்தி எதிரொலி தேசிய நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்
சின்னசேலம்
சின்னசேலம் அடுத்த கனியாமூர் பகுதியில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பை கழிவுகளை கொட்டி வைத்ததால் அதில் இருந்து வீசிய துர்நாற்றம் பாதசாரிகள் வாகன ஓட்டிகளை முகம்சுழிக்க வைத்தது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதோடு, சுற்றுச்சூழல் மாசு அடைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதுபற்றிய செய்தி படத்துடன் தினத்தந்தியில் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டது.
இந்த பிரச்சினை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு வந்ததை அடுத்து தேசிய நெடுஞ்சாலையோரம் கொடப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன் மற்றும் அலுவலர்கள் குறிப்பிட்ட பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி சுத்தப்படுத்தினர். தற்போது அப்பகுதி தூய்மைாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பஸ் பயணிகள் ஒருவித மனநிறைவுடன் செல்வதாக தெரிவித்தனர்.