< Back
தமிழக செய்திகள்
அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
திருச்சி
தமிழக செய்திகள்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

தினத்தந்தி
|
20 Sept 2023 3:47 AM IST

அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது.

துவாக்குடி:

விநாயகர் சதுர்த்தியையொட்டி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் இந்து முன்னணி சார்பில் சுமார் 8 அடி உயர விநாயகர் சிலை, உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக தெரிகிறது. இது பற்றி தகவல் அறிந்த துவாக்குடி போலீசார், திருவெறும்பூர் வருவாய் துறையினர் ஆகியோர் அங்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த சிலையை அகற்ற அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து துவாக்குடி போலீசார் அந்த சிலையை அகற்றி, சரக்கு ஆட்டோ மூலம் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்