< Back
மாநில செய்திகள்
திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
16 July 2022 1:56 AM IST

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருவெறும்பூர்:

திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கடைகள், வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதுடன், விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அந்த சாலையில் இருபுறமும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், மேற்கூரைகள், படிக்கட்டுகள் என காட்டூர் ஆயில் மில்லில் இருந்து துவாக்குடி அருகே உள்ள அசூர் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் நடைபெற்றது. இதையொட்டி திருவெறும்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்