< Back
மாநில செய்திகள்
கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கரூர்
மாநில செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
17 Aug 2023 11:38 PM IST

வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றம்

கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் 61 சென்ட் இடம் ஆத்தூர் ஊராட்சி வடுகப்பட்டி செல்லும் சாலையில் உள்ளது. கரூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை கையகப்படுத்தும் பணி நேற்று இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜெயதேவி தலைமையில் நடைபெற்றது.

அப்போது கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பாதுகாப்பு

வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் 61 சென்ட் இடம் நீதிமன்ற உத்தரவின்படி சுவாதீனம் எடுக்கப்பட்டு கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது என அப்பகுதியில் பதாகைகள் வைக்கப்பட்டன.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது ெசயல் அலுவலர் சரவணன், உதவி ஆணையர் நந்தகுமார், அதிகாரிகள், போலீசார் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்