< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
நூலக இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|5 Aug 2022 1:36 AM IST
நூலக இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
காட்டுப்புத்தூர்:
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் உள்ள நூலகத்திற்கு சொந்தமான இடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் வருவாய்த்துறை சார்பில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. இதில் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இந்த பணியில் திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், தொட்டியம் மண்டல துணை தாசில்தார் கவிதா, வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நூலகர் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன. காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.