கரூர்
கரூர் சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|கரூர் சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கோரிக்கை
கரூர் சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் இருந்து மதுரை பைபாஸ் ெபரியார்நகர் வரை பல்வேறு வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்கள், ஓட்டல்கள், கடைகள், குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் ஏராளமானவை சாலையை ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இதனால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வந்தது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதையடுத்து நேற்று காலை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், ஓட்டல்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள்ளிட்டவைகளுக்கு முன்பு இருந்த தற்காலிக மேற்கூரைகள், விளம்பர பெயர் பலகைகள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டது. அப்போது கரூர் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.