< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பாளையங்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|27 Oct 2023 2:22 AM IST
பாளையங்கோட்டை தியாகராஜநகர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் நோக்கில் ரெயில்வே பாலம் அமைக்கும் பணி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் பூமி பூஜையுடன் தொடங்கி 2017 பிப்ரவரியில் பணிகள் தொடங்கின. தற்போது இருபுறமும் மேம்பாலம் அமைக்கப்பட்டு தண்டவாளத்தின் மேல்பகுதியில் இரும்பு கர்டர் அமைக்கப்படாமல் உள்ளது. கர்டர் அமைக்கும் பணி ரெயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் இந்த பணி பாதியில் நிற்கிறது. இந்த நிலையில் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்பட்டன.