திருச்சி
கோர்ட்டு வளாகம் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|கோர்ட்டு வளாகம் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் மாவட்ட கோர்ட்டு வளாகம் அமைந்துள்ளது. இந்த கோர்ட்டு வளாகம் முன்புள்ள சுற்றுச்சுவரையொட்டி சிலர் ஆக்கிரமித்து கீற்றுக்கொட்டகை போட்டு முத்திரைத்தாள் விற்று வந்தனர். சில நோட்டரி பப்ளிக் வக்கீல்களும் அதில் மேஜை, நாற்காலி போட்டு உட்கார்ந்து, தங்களிடம் வருபவர்களுக்கு கையொப்பம் போட்டு கொடுத்துக் கொண்டிருந்தனர். கோர்ட்டு நுழைவு பகுதியில் அழகை கெடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அவை இருப்பதாகவும், அவற்றை அப்புறப்படுத்தும்படியும் வக்கீல் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்பேரில் 4-வது மண்டல உதவி பொறியாளர் பக்ருதீன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் அந்த கீற்றுக்கொட்டகையை அகற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.