< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மாநகராட்சி பகுதிகளில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|8 Oct 2023 11:47 PM IST
கரூர் மாநகராட்சி பகுதிகளில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
கரூர் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதையடுத்து நேற்று 2-வது நாளாக சாலையோரம் மற்றும் கடைகளின் முன்பு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.இதேபோல் கரூர் ஜவகர்பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் மற்றும் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி, மாநகராட்சி வாகனத்தில் எடுத்து சென்றனர்.