< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரியலூர்
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
5 March 2023 12:03 AM IST

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தா.பழூர்:

காலி செய்ய அறிவுறுத்தல்

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு வீதியின் பக்கவாட்டு பகுதியில் சிலர் கொட்டகைகள் அமைத்து பயன்படுத்தி வந்தனர். அந்த இடம் போக்குவரத்துக்கான பகுதி என்று கூறி, அந்த இடத்தில் இருந்து காலி செய்ய அவர்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அந்த இடத்தில் கொட்டகை அமைத்திருந்தவர்கள் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் இருப்பதாகவும், அந்த இடம் மனை பிரிவு பகுதிதான் என்றும் கூறி, அந்த இடத்தில் இருந்து காலி செய்ய மறுத்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்நிலையில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விசுவநாதன் தலைமையில் அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்த கொட்டகைகளை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது, கொட்டகைகள் அமைத்திருந்தவர்கள் அதிகாரிகளிடம் அந்த இடத்தில் நீண்ட நாட்களாக குடியிருப்பதாகவும், சட்ட ரீதியாக அதற்கான உரிமைகள் தங்களுக்கு உள்ளதாகவும், அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை ஆக்கிரமிப்பாக கருதி அப்புறப்படுத்த முடியாது என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அதிகாரிகள், அந்த இடம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதன் காரணமாக ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருக்க முடியாது. ஒருவேளை தங்களிடம் தடை ஆணை ஏதும் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டனர். ஆனால் அந்த இடத்திற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான தடை ஆணை இதுவரை பெறப்படாததால், வருவாய் துறையினர் மற்றும் தா.பழூர் போலீசார் உதவியுடன் அந்த இடத்தில் இருந்த கொட்டகைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்