< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
20 Dec 2022 1:02 AM IST

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே கலைக்குடிப்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இலுப்பூர் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் செய்திகள்