< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|8 Sept 2023 8:03 PM IST
கே.வி.குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் தாலுகா குடியாத்தம் -காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் கே.வி.குப்பம், வடுகந்தாங்கல், லத்தேரி பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக அளவீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
அப்போது நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர், தாசில்தார் அ.கீதா, காவல் துறையினர், மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், வட்ட துணை ஆய்வாளர், வட்ட சார் ஆய்வாளர், தலைமை நில அளவையர் சு.குபேரன்ஷா, குறுவட்ட அளவர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.
முன்னறிவிப்பு காரணமாக ஆக்கிரமிப்பாளர்கள் தாமாகவே முன்வந்து பெரும்பாலான ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.