< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலூர்
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
11 July 2023 6:49 PM IST

வள்ளிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

வள்ளிமலை

காட்பாடி அருகே வள்ளிமலை சாலையில் இருந்து பொன்னை வரை நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் காட்பாடியில் இருந்து பொன்னை வரை உள்ள சிறு தரைப்பாலங்களை பெரிய தரைப்பாலங்களாக அகலப்படுத்தும் பணியும் நடைபெறுகிறது.

இதனால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் சாலைகளின் ஓரங்களில் உள்ள மின் கம்பங்கள் மாற்றி அமைத்தனர். மேலும் சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வந்தது.

அதனைத்தொடர்ந்து சாலைகளின் இருபக்கங்களிலும் சாலை விரிவாக்கத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன..

இதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வள்ளிமலை தேரடி பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை இன்று பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்