திருவாரூர்
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் செட்டிக்குளம் உள்ளது. இதற்கு நீராதாரத்தை பெற்றுத்தரும் பிரதான பாசன வாய்க்கால் மெயின் ரோட்டை கடந்து செல்கிறது. இதில் தனியார் ஆக்கிரமிப்புகள் பெருகியதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டது. இதை அகற்றும் பணி தொடர்ந்து வருகிறது. இதில் தர்கா எதிர்புறம் உள்ள மீன் மார்க்கெட்டில் 2 கொட்டாகை மற்றும் வாய்க்காலில் மண்ணால் தூர்க்கப்பட்ட பகுதி ஆகியவை விடுபட்டு இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ் குமார் தலைமையில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் வினோத், கிராம நிர்வாக அலுவலர் முகமது ரபீக் உள்ளிட்டோர் பொக்லின் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதையொட்டி முத்துப்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஏட்டுகள் மணிவண்ணன், ரமேஷ் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.