வேலூர்
பள்ளி மாணவிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
|காட்பாடியில்பள்ளி மாணவிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது.
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நுழைவு பகுதியில் பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டியவாறு சிலர் ஆக்கிரமித்து தள்ளுவண்டியிலும், கூரை அமைத்தும் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு இடையூறாக உள்ளதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் மாநகராட்சி மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகளுக்கு அந்த சுவர் ஒரு காரணமாக இருப்பதாக பொதுமக்கள் கூறினர். அந்த சுவரும் பயன்படாத வகையில் இருந்தது. உட்புறத்தில் பள்ளிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மற்றொரு சுற்றுச்சுவர் இருந்தது. எனவே பயன்பாட்டில் இல்லாத ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய சுவரை இடிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சுவர் இடித்து அகற்றப்பட்டது.