< Back
மாநில செய்திகள்
சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தினத்தந்தி
|
7 Oct 2023 11:04 PM IST

சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது தான் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அந்த மேம்பாலத்தின் அணுகு சாலையோரத்தில் கடைகள் வைத்திருப்பவர்கள் சாலையை ஆக்கிரமித்தும் கடைகளை வைத்திருந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று காலை போலீசார் பாதுகாப்புடன் அந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்றனர். ஆனால் கடைக்காரர்களை தாமாக முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றினர். அவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் உதவினர்.

மேலும் செய்திகள்