< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், பேனர்கள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், பேனர்கள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை

தினத்தந்தி
|
28 May 2023 3:35 PM IST

காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், பேனர்களை அகற்றி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆலோசனை கூட்டம்

காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என்று கடந்த மாதம் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் சாலை வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் அவர்கள் எந்தவித ஒத்துழைப்பும் மாநகராட்சிக்கு அளிக்காததும், போக்குவரத்துக்கு இடையூறாக இந்த கடைகள் உள்ளதாக பொதுமக்கள் தொடர் புகார் அளித்தனர்.

கடைகள், பேனர்கள் அகற்றம்

இதையடுத்து காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளாக உள்ள பஸ் நிலையம், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ராஜவீதிகளில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகள் மற்றும் நடைபாதையில் அமைக்கப்பட்டு இருந்த பேனர்கள் போன்றவற்றை மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியுடன் அகற்றினர்.

விதிகளை மீறி மீண்டும் பேனர்கள் மற்றும் சாலைகளில் கடைகளை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்