< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்பு அகற்றம்
|21 July 2022 12:02 AM IST
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரடி படிக்கட்டுகளை ஆக்கிரமித்து 2 கடைகள் கட்டப்பட்டிருந்தது. இந்த கடைகள் நேற்று இந்து சமய அறநிலையத்துறை கடலூர் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில், செயல் அலுவலர் மாலா, ஆய்வாளர் கோவிந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர் சுந்தரி ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் வேறு யாரும் ஆக்கிரமிப்பு செய்யமுடியாத வகையில், அங்கு கம்பி வேலிகள் அமைத்து எச்சரிக்கை பலகையை அதிகாரிகள் வைத்துள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க விருத்தாசலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.