< Back
மாநில செய்திகள்
முதுகுளத்தூர் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

முதுகுளத்தூர் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தினத்தந்தி
|
23 Aug 2023 12:25 AM IST

முதுகுளத்தூர் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பேரூராட்சி சார்பாக நடைபெற்றது. இந்த பணியை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, முதுகுளத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சின்ன கண்ணு, முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோரின் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் ராஜேஷ் குமார், செல்வகுமார் மேற்பார்ைவயாளர் சரவணன் உள்பட காவல்துறையினர், வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்