< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பு அகற்றம்
|21 Jun 2023 12:15 AM IST
திண்டிவனம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே விழுக்கம், ஆசூர் ஆகிய கிராம வயல்வெளியில் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கரும்பு ஆலை கழிவுகளை கொட்டி வைத்தனர். இது குறித்து மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு புகார் வந்தது. அதன்படி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, ஊழியர்கள் மற்றும் திண்டிவனம் தாலுகா அலுவலக ஊழியர்கள் நேரில் சென்று நிலங்களை அளவீடு செய்து, பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த சமயத்தில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.