கள்ளக்குறிச்சி
தியாகராஜபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
|தியாகராஜபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
சங்கராபுரம்,
தமிழகம் முழுவதும் நீர், நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என சென்னை ஐக்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தியாகராஜபுரம் ஊராட்சிக்கு சொந்தமான 97 சென்ட் பரப்பளவில் உள்ள குட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், கரும்புகளை சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, உலகநாதன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஊழியர்கள் அகற்றினர். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அயூப்கான், வருவாய் ஆய்வாளர் திருமலை, நில அளவையர் பத்மநாபன், கிராம நிர்வாக அலுவலர் பர்க்கத்துன்னிஷா, ஊராட்சி மன்ற தலைவர் சங்கரன், துணை தலைவர் சித்ரா சோலை, கிராம உதவியாளர் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.