< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
|18 July 2022 11:32 PM IST
சேர்க்காடு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டது.
திருவலம் அருகே சேர்க்காடு ஏரிக்கரை ஓரம் நீர்நிலைகள் பாதிக்கும் வகையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 11 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கோர்ட்டு உத்தரவின் படி நேற்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
நீர்ப்பாசன பிரிவு உதவி செயற்பொறியாளர் கோபி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட நீர்வளத்துறை, மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர். திருவலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.