கரூர்
சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்
|சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டது.
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்குட்பட்ட நொய்யல் - கரூர் செல்லும் சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத சூழ்நிலையில் மண் குவியல்கள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து வாகனங்களும் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து பாலத்துறை வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஒப்பந்ததாரர்களிடம் இது குறித்து எடுத்துக் கூறி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த மண் குவியல்களை அகற்றி வாகனங்கள் சென்றுவர நடவடிக்கை எடுத்தனர். இதனால் பரமத்தி வேலூரில் இருந்து கொடுமுடி செல்லும் வாகனங்கள் பாலத்துறை வழியாகவும், அதேபோல் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கரும்பு லாரிகள், டிராக்டர்கள் பாலத்துறை வழியாக சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.