< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் அனுமதியின்றி வைத்த 56 விளம்பர பலகை அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
|23 Nov 2022 4:03 PM IST
விளம்பர பலகைகளை அகற்றும் பணியானது மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மண்டல அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அகற்றப்பட்டு வருகின்றன. 19, 20 ஆகிய இரு நாட்களில் 15 மண்டலங்களில் நடந்த ஆய்வுகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 56 விளம்பர பலகைகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு உள்ளது.
தொடர்ந்து விளம்பர பலகைகளை அகற்றும் பணியானது மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது.