< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அனுமதியின்றி வைக்கப்பட்ட 352 விளம்பர பலகைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
|25 Dec 2022 2:53 PM IST
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் டிசம்பர் 22 மற்றும் 23-ந்தேதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 116 விளம்பரப் பலகைகள் மற்றும் 236 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனிடையே மாநகராட்சி அலுவலர்களால் விளம்பரப் பலகைகளின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு, மழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் சாயக்கூடிய நிலையில் உள்ள விளம்பரப் பலகைகளும் உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் விளம்பரப்பலகைகள் மற்றும் பதாகைகள் அமைப்பவர்களின் மீது உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.