< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்: சசிகலா தாக்கல் செய்த மனு மீது 23 ஆம் தேதி விசாரணை
|20 March 2023 3:39 PM IST
பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது தொடர்பாக சசிகலா தாக்கல் செய்த மனு வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த தன்னை கட்சியில் இருந்தும், பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு ஒன்றை தொடுத்தார்.
இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நிராகரிப்பு மனுவை ஏற்ற நீதிமன்றம், சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதில் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியிடம், இந்த வழக்கை பட்டியலிட்டு விசாரணை நடத்தவேண்டும் என முறையிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் 23ம் தேதிக்கு பட்டியலிடுவதாக தெரிவித்து உள்ளார்.