< Back
மாநில செய்திகள்
கெலமங்கலம் பேரூராட்சியில் அனுமதி பெறாமல் வைத்த 50 பேனர்கள் அகற்றம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கெலமங்கலம் பேரூராட்சியில் அனுமதி பெறாமல் வைத்த 50 பேனர்கள் அகற்றம்

தினத்தந்தி
|
11 Jun 2023 1:00 AM IST

ராயக்கோட்டை:

கெலமங்கலம் பேரூராட்சி பகுதியில் அனுமதியின்றி விளம்பர பலகை, பிளக்ஸ் பேனர்கள், சுவரெட்டிகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அலுவலர்கள் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் 50 இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த பேனர்களை நேற்று அகற்றினர். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறினால் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி விளம்பர பலகைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறைதண்டனை, அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள், பதாகைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்