நாமக்கல்
14 தாசில்தார்கள் பணியிடமாற்றம்
|நாமக்கல் மாவட்டத்தில் 14 தாசில்தார்கள் பணி இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
நாமக்கல்:
பணியிடமாற்றம்
நாமக்கல்லில் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத்தின் தனிதாசில்தாராக பணியாற்றி வந்த மாதேஸ்வரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை தனித்தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பேரிடர் மேலாண்மை பிரிவின் தனித்தாசில்தார் ராஜேஷ்கண்ணா, சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத்தின் தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டார். மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் துணை மேலாளராக பணியாற்றி வந்த சக்திவேல், பேரிடர் மேலாண்மை பிரிவின் தனித்தாசில்தாராகவும், திருச்செங்கோட்டில் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத்தின் தனிதாசில்தாராக பணியாற்றி வந்த செல்வராஜ், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் துணை மேலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல் நாமக்கல் கலெக்டர் அலுவலக தனித்தாசில்தார் (தேர்தல்கள்) சுப்பிரமணியன், சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டத்தின் திருச்செங்கோடு தனிதாசில்தாராகவும், திருச்செங்கோடு நகர நிலவரித்திட்ட தனித்தாசில்தார் சசிகலா, குமாரபாளையம் நகர நிலவரித்திட்ட தனித்தாசில்தாராகவும், பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், திருச்செங்கோடு நகர நிலவரித்திட்ட தனித்தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டனர்.
குமாரபாளையத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராக பணியாற்றி வந்த சிவக்குமார், பரமத்திவேலூர் தாசில்தாராகவும், குமாரபாளையம் நகர நிலவரித்திட்ட தனித்தாசில்தார் ஜானகி, குமாரபாளையத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
14 தாசில்தார்கள்
இதனிடையே நாமக்கல் டாஸ்மாக் உதவி மேலாளர் ராஜேஷ், நாமக்கல் நில எடுப்பு அலகின் தனித்தாசில்தாராகவும், நாமக்கல் நில எடுப்பு அலகில் தனித்தாசில்தாராக பணியாற்றி வந்த லோகநாதன், நாமக்கல் டாஸ்மாக் உதவி மேலாளராகவும் நியமனம் செய்யப்பட்டனர். நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவின் தனித்தாசில்தார் பிரகாசம், பரமத்திவேலூரில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராகவும், சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ், நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவின் தனித்தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். பரமத்திவேலூர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்தாசில்தார் செந்தில்குமார், சேந்தமங்கலம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இந்த 14 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கான உத்தரவை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கி உள்ளார்.