< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
பள்ளிவாசல் திறப்பில் மத நல்லிணக்க சீர்வரிசை
|18 March 2023 1:08 AM IST
பள்ளிவாசல் திறப்பில் மத நல்லிணக்க சீர்வரிசை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டையில் காமராஜபுரத்தில் புதிதாக பள்ளிவாசல் நேற்று திறக்கப்பட்டது. இதில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தை சேர்ந்த மத போதகர்களும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து மத நல்லிணக்க சீர் எடுப்பு விழா நடத்தினர். இதில் தட்டில் பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவற்றை ஏந்தி ஊர்வலமாக பள்ளிவாசலுக்கு வந்தனர். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. ஒருவருக்கொருவர் அன்பையும், வாழ்த்தையும் பரிமாறிக்கொண்டனர்.